Vengeance திரை விமர்சனம்
ரியாலிட்டி ஷோ மூலம் ரசிகர்களை கவர்ந்து வெள்ளிதிரையிலும் நல்ல ரோலை தேர்ந்தெடுத்து நடித்த அபர்னிதி நடிப்பில், ராகுல் அசோக் இயக்கத்தில் வெளிவந்துள்ள வெஞ்சன்ஸ் படம் எப்படி பார்ப்போம்.

கதைக்களம்
அபர்னிதி சிறு வயதிலேயே ஒரு வித தாழ்வு மனப்பான்மையில் தன்னை யாரும் பெரிதும் கண்டுக்க மாட்டுகிறார்கள் என நினைத்து, பத்தாம் வகுப்பில் முதல் மதிப்பெண் எடுத்து எல்லோர் கவனத்தையும் தன் பக்கம் திருப்புகிறார்.
இந்த கவனமும் சில நாட்களில் கலைய, நன்றாக படித்து கலேக்டர் ஆகி எல்லோர் மத்தியிலும் புகழ் வாய்ந்து விளங்குகிறார்.

யாருக்கும் அஞ்சாமல் இவர் எடுக்கும் சில முடிவுகள் அரசியல் வட்டாரத்தில் சூடு பறக்கிறது, இதன் காரணமாக ஒரு கட்டத்தில் இவருக்கு வேலையே போகும் நிலை வருகிறது.
ஆனால், இவரின் திறமை கண்டு ஒரு மிகப்பெரிய பொறுப்பு இவருக்கு வர, பிறகு என்ன அபர்னிதி ஆடும் ஆட்டமே இந்த வெஞ்சன்ஸ் மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்
அபர்னிதி ஒன் வுமன் ஷோ என்று தான் சொல்ல வேண்டும், மிடுக்கான தோற்றம், அதிரடி முடிவுகள் தான் தோற்றாலும் மீண்டு எழ வேண்டும் என அவர் கங்கனம் கட்டி வருவது என கலக்கியுள்ளார்.
இவருடன் மோதலுக்கு வரும் ஜான் விஜய், ஒரு அரசியல்வாதியை நியாபகப்படுத்துகிறார், பல படத்தில் பார்த்த அதே மேனரிசம் தான் அவருக்கு, இதை தாண்டி இளவரசு, லிவிங்ஸ்டன் எல்லாம் மனதில் நிற்கின்றனர்.

இயக்குனர் ஒரு நல்ல பொலிட்டிகல் ட்ராமவை தேர்ந்தெடுத்துள்ளார், அதில் தாய் நாடு என பெயர் எல்லாம் மாற்றியது ஆர்வத்தை தூண்டுகிறது கதை மேல். கதை களம் நடிகர்கள் என அனைவரும் சிறப்பாக இருந்தாலும் திரைக்கதை பெரிய சுவாரஸ்யம் இன்றி செல்வது கொஞ்சம் ஏமாற்றம்.
அதோடு லாஜிக் என்பது பெரிதாக சில இடங்களில் ஒட்டவில்லை, டுவிஸ்ட் தனக்கேற்றது போல் சில இடங்களில் வைத்தது போல் இருந்தது. டெக்னிக்கல் ஒர்க் ஆக ஒளிப்பதிவு, இசை நன்றாக இருந்தது.

க்ளாப்ஸ்
அபர்னிதி மற்ற நடிகர்கள் பங்கு
கதை
பல்ப்ஸ்
லாஜிக் மீறல்கள், சுவாரஸ்யம் இல்லாத திரைக்கதை.
மொத்தத்தில் இந்த வெஞ்சன்ஸ் களம் நன்றாக இருந்தும் காட்சிகளில் சுவாரசியம் இல்லை.

முதல் நாளிலேயே தடுமாறிய ட்ரம்பின் ஹார்முஸ் முற்றுகை... அதிரடியாகக் கடந்த ஈரான் கப்பல்கள் News Lankasri
ஹார்முஸ் முற்றுகையைக் கைவிடுங்கள்... ஈரானின் அதிரடி நகர்வால் ட்ரம்பிடம் கெஞ்சும் சவுதி அரேபியா News Lankasri