தளபதி 68 படத்தை வெங்கட் பிரபு இப்படி தான் எடுக்க போகிறாரா.. அவரே கூறிய தகவல்
தளபதி 68
வெங்கட் பிரபு இயக்கத்தில் அடுத்ததாக தளபதி 68 படம் உருவாகவுள்ளது. தளபதி விஜய் ஹீரோவாக நடிக்கவிருக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ஏ.ஜி.எஸ். நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.
கடந்த வாரம் அனைவருக்கும் சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்தது. இதனால் இப்படத்தின் மீது அளவுகடந்த எதிர்பார்ப்பை ரசிகர்கள் வைத்துள்ளனர்.
சீரியஸ் or என்டர்டெயின்மென்ட்
இந்நிலையில், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட வெங்கட் பிரபு சீரியஸ் மற்றும் என்டர்டெயின்மென்ட் படங்கள் குறித்து பேசினார்.
இதில் 'நான் சீரியஸ் படம் எடுத்தா ஓட மாட்டிங்குது. என்டர்டெயின்மென்ட்டா எடுத்தா தான் மக்கள் பாக்குறாங்க. நான் இப்படி தான் படம் எடுப்பேன்னு மக்கள் முடிவு செஞ்சுட்டாங்க. அதனால் இனி என்டர்டெயின்மென்ட் கொண்ட படங்களை தான் எடுப்பேன்' என பேசியுள்ளார் வெங்கட் பிரபு.
இதன்முலம் இயக்குனர் வெங்கட் பிரபு அடுத்து இயக்கவிருக்கும் தளபதி 68 திரைப்படம் என்டர்டெயின்மென்ட் படமாக இருக்கும் என தெரியவந்துள்ளது.
நடிகர் சிபிராஜின் மகன்களா இது! நன்றாக வளர்ந்து விட்டார்களே, இதோ பாருங்க

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu
