வலிமை சர்வதேச தரத்தில் இருக்கு! முன்னணி இயக்குனர் பாராட்டு
வலிமை படத்தின் ட்ரைலர் எப்போது வரும் என காத்திருந்த ரசிகர்களுக்கு தற்போது விருந்தளிக்கும் விதமாக ட்ரெய்லர் வீடியோ வெளியாகி ட்ரண்ட் ஆகி வருகிறது.
போலீசாக நடித்திருக்கும் அஜித் மோசமான குற்றங்களில் ஈடுபட்டு வரும் வில்லன் கார்த்திகேயாவை பிடிக்க செய்யும் முயற்சிகள், மற்றும் அவர்கள் நடுவில் நடக்கும் மோதல்கள் பற்றியது தான் படத்தின் முழு கதையும்.
இந்நிலையில் தற்போது வெங்கட் பிரபு வலிமை ட்ரைலரை பாராட்டி ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார். படம் சர்வதேச தரத்தில் இருக்கிறது என ஹெச் வினோத்தை அவர் பாராட்டி இருக்கிறார்.
"வலிமைங்குறது அடுத்தவனை காப்பாத்த தான் அழிக்க இல்ல. அடுத்த லெவல் கேமுக்காக காத்திருக்கிறேன். Waiting for #AK #AlltimeKing தரிசனம்!! #Hvinod international stuff brother!!" என வெங்கட் பிரபு குறிப்பிட்டு இருக்கிறார்.
Valimai ngradhu aduthavana kaapatha thaan azhika illa!! Action extravaganza!! Waiting for the Adutha level game!! #ValimaiPongal https://t.co/2bDZsnHYSb waiting for #AK #AlltimeKing dharisanam!! #Hvinod international stuff brother!!
— venkat prabhu (@vp_offl) December 30, 2021