நானும் வெற்றிமாறன் போல் படம் எடுக்க ஆசைப்படுகிறேன்- வெங்கட் பிரபுவின் வெளிப்படையான பேச்சு

By Yathrika May 23, 2023 02:30 PM GMT
Report

வெங்கட் பிரபு

வெங்கட் பிரபு இயக்கத்தில் திரைக்கு வந்த படம் "கஸ்டடி". இப்படம் வெங்கட் பிரபுவுக்கு எதிர்பார்த்த வெற்றி அளிக்காத சூழலில் அவருக்கு விஜய் நடிக்கும் "தளபதி 68" இயக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் "லியோ" படம் நடித்து வரும் விஜய் அடுத்து இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படம் யுவன் சங்கர் ராஜா இசையில் அகோரம் எ.ஜி.எஸ்.என்டேர்டைன்மெண்ட் தயாரிக்க போவதாக தகவல் வந்துள்ளது, மேலும் இப்படம் 2024இல் வெளியாகவுள்ளது.


இந்நிலையில் டேனிஸ் தியேட்டர் ஸ்டுடியோஸ் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக வெங்கட் பிரபு கலந்து கொண்டார்.

அங்கு பத்திரிகையாளர் ஒருவர் வெங்கட் பிரபுவிடம் "நீங்கள் சீரியஸான படம் எடுத்தால் எப்படி தயார் படுத்துவார்கள் என கேட்டுள்ளார்.

அதற்கு அவர் கூறியதாவது: "நான் சீரியஸான படம் எடுத்தால் அது ஓடமாட்டுது.

வெற்றிமாறனை போல் படம் எடுக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். ஆனால், மக்கள் என்னிடம் இருந்து சீரியஸான படங்களை விரும்பவில்லை.

மங்காத்தா, மாநாடு போன்ற படங்கள் வெற்றி பெறுகிறது. என்டர்டெயின்மெண்ட் படங்கள் தான் எனக்கு பாதுகாப்பாக உள்ளது என தெரிவித்திருந்தார்."  

நானும் வெற்றிமாறன் போல் படம் எடுக்க ஆசைப்படுகிறேன்- வெங்கட் பிரபுவின் வெளிப்படையான பேச்சு | Venkat Prabhu About Vetrimaaran Films

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US