விஜய்யை ஒழுங்காக பயன்படுத்தவில்லை.. வெங்கட் பிரபு வேதனை
GOAT
நடிகர் விஜய் நடித்து வெங்கட் பிரபு இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் GOAT. பெரும் எதிர்பார்ப்புடன் வெளிவந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் சாதனை படைத்தது.
இந்நிலையில், பேட்டி ஒன்றில் வெங்கட் பிரபு விஜய்யின் நடிப்பு குறித்து சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
வெங்கட் பிரபு வேதனை
அதில், " விஜய் ஒரு சிறந்த நடிகர் ஆனால், இந்த சினிமா அவரை சரியாக பயன்படுத்தாமல் ஒரு கமர்ஷியல் வட்டத்துக்குள் வைத்து அடக்கிவிட்டதாக எனக்கு தோன்றுகிறது.
GOAT படத்தில் விஜய் அழும் சீனில் ஓவர் எமோஷனலாக நடித்துவிட்டார். அதனால் நான் அவரை மீண்டும் அந்த சீனில் நடிக்குமாறு கேட்டுக்கொண்டேன். அவர் அதற்கு எதுவும் பேசாமல் நான் கேட்டது போன்று நடித்து கொடுத்தார்.
அதேபோல் சினேகாவிடமும் தனது மகன் இறந்ததை சொல்லாமலே புரிய வைக்க வேண்டும் என்று கூறினேன். அந்த சீனிலும் விஜய் அருமையாக நடித்திருப்பார்" என்று கூறியுள்ளார்.