மேடையில் எழுத்து நின்று கத்திய இயக்குநர் வெங்கட் பிரபு! விஜய் ரசிகர் கேள்வியால் டென்ஷன்
இன்று கோட் படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் ஆகி இருக்கும் நிலையில் ரசிகர்கள் அதை கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் மாலையில் இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி இருவரும் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்கள்.

விஜய் ரசிகர் கேள்வி.. கொந்தளித்த வெங்கட் பிரபு
அந்த நிகழ்ச்சியில் விஜய் ரசிகர் ஒருவரும் இடையில் மைக்கை வாங்கி கேள்வி கேட்டார். விஜய் அரசியலில் நுழைந்து இருப்பது பற்றியும், உங்க குடும்பத்தில் இருந்து யார் அவரது கட்சியில் சேர போகிறார்கள் என அந்த நபர் கேள்வி எழுப்ப வெங்கட் பிரபு டென்ஷன் ஆகிவிட்டார்.
"விஜய் சார் கிட்ட கேட்க வேண்டிய கேள்வியை ஏன் என்கிட்ட கேக்குறீங்க. என் குடும்பத்தில் என்ன நடக்கிறது என உங்ககிட்ட ஏன் சொல்லணும். உங்க வீட்ல பிரச்சனை என்றால் நான் கேட்கிறேனா" என வெங்கட் பிரபு கோபமாக பதில் அளித்தார்.
வாக்குவாதம் தொடர்ந்த நிலையில் இறுதியில் வெங்கட் பிரபு அவரை கலாய்த்துவிட்டார். 'உங்க தலைவர் கட்சி பெயரையே தப்பா சொல்றாயே.. இவரெல்லாம்' என வெங்கட் பிரபு விமர்சித்திருக்கிறார்.
வீடியோவில் பாருங்க.
TVK பற்றி கேள்வி கேட்ட Reporter...
— Cineulagam (@cineulagam) August 17, 2024
திடீரென Tension ஆன Venkat Prabhu..!#GOAT #Vijay #TvkVijay #Venkatprabhu #Thalapathyvijay #Yuvanshankarraja #cineulagam pic.twitter.com/UclSrRURCM
தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக 'ஜனநாயகன்' தயாரிப்பாளர் - வெளியான அரசாணை IBC Tamilnadu
பறிபோன மென்பொருள் வேலை... இலங்கையர் எடுத்த முடிவு: இன்று தினசரி ரூ 50,000 கடந்த விற்றுமுதல் News Lankasri