மங்காத்தா 2 கதை ரெடியா? பரபரப்பான நேரத்தில் வெங்கட் பிரபு சொன்ன பதில்
அஜித் - வெங்கட் பிரபு கூட்டணியில் ஹிட் படமான மங்காத்தா வெளியாகி பத்து வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. இந்நிலையில் சமீபத்தில் வெங்கட் பிரபு ஒரு விழாவில் பேசும்போது மங்காத்தா 2 பற்றி அப்போதே அஜித் - விஜய் ஆகியோரிடம் பேசியதாக கூறி இருந்தார்.
அதனால் அவர் மங்காத்தா கதையை எழுதி முடித்துவிட்டார் என்றும், விரைவில் மங்காத்தா 2 முயற்சிகள் தொடங்கும் எனவும் ஒரு தகவல் பரவியது.

கதை ரெடியா?
இந்நிலையில் தற்போது வெங்கட் பிரபு அது பற்றி விளக்கம் கொடுத்து இருக்கிறார். 'வழக்கமாக எல்லா நிகழ்ச்சிகளையும் போல அந்த கல்லூரி விழாவிலும் மங்காத்தா 2 பற்றி பேசினார்கள், எனக்கு அஜித் - விஜய் இருவரையும் இணைந்து இயக்கும் ஆசை பற்றி அவர்களிடம் சொன்னேன். ஆனால் மங்காத்தா 2 கதை கூட நான் இன்னும் ரெடி செய்யவில்லை" என கூறி இருக்கிறார்.