அஜித்தின் வலிமை பட FDFS டிக்கெட் பெற்ற பிரபல இயக்குனர்- சந்தோஷத்தில் அவர் போட்ட டுவிட்
அஜித்தின் வலிமை படம் மக்களிடம் பெரிய எதிர்ப்பார்ப்பை கிளப்பியுள்ளது. அதற்கு காரணம் அவரும், இயக்குனர் வினோத்தின் மேல் ரசிகர்கள் வைத்துள்ள நம்பிக்கையும் தான்.
பைக், கார் ரேஸில் அஜித் சும்மா தெறிக்கவிடுவார் என்பது அனைவருக்கும் தெரியும், அந்த விஷயங்கள் படத்தில் அதிகம் இருப்பதாக கூறப்பட ரசிகர்களின் எதிர்ப்பார்ப்புக்கு எல்லையே இல்லாமல் போனது.
வரும் பிப்ரவரி 24ம் தேதி படம் ரிலீஸ், பல ரசிகர்கள் FDFS டிக்கெட் கிடைக்குமா என இருக்கிறார்கள்.
தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு வலிமை படத்தின் FDFS காட்சிக்கான டிக்கெட்டை வாங்கிவிட்டாராம், அதனை அவரே டுவிட்டரில் போட்டுள்ளார். அவரது டுவிட் கீழே கங்கை அமரன், பிரேம்ஜியை அழைத்து செல் என டுவிட் போட, பிரேம்ஜியும் எனக்கு ஒரு டிக்கெட் என பதிவு செய்திருக்கிறார்.
இதோ அவர்களின் வலிமை பட டுவிட்,
Got my #valimaifdfs tickets!!! ?
— venkat prabhu (@vp_offl) February 21, 2022