வலிமை பட அப்டேட்டுக்காக காத்திருக்கும் இயக்குனர் வெங்கட் பிரபு, மாநாடு படம் குறித்து என்ன கூறியுள்ளார் பாருங்க..
இயக்குனர் வெங்கட் தமிழ் சினிமாவில் மிகவும் முக்கியமான இயக்குனர்களில் ஒருவர், இவர் இயக்கத்தில் கடைசியாக சென்னை 28 படத்தின் இரண்டாம் பாகம் வெளியானது.
அதன்பின் இவர் இயக்கத்தில் நடிகை காஜல் நடித்த லைவ் டெலிகாஸ்ட் சீரிஸ் பிரபல OTT தளத்தில் சமீபத்தில் வெளியானது.
இந்நிலையில் அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ள வெங்கட் பிரபு மாநாடு திரைப்படத்தின் அப்டேட்டை கூறியுள்ளார்.
"இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு மீதம் உள்ளது, அதில் மக்கள் கூட்டமாக இருக்கும் காட்சிகள் படமாக பட உள்ளது. மேலும் அதன் படப்பிடிப்பு 12 அல்லது 15 முடிந்துவிடும், அதனை முடித்த பின் இப்படத்தின் ரிலீஸ் குறித்து முடிவு செய்து விடுவோம்" என கூறியுள்ளார்.
அதுமட்டுமின்றி ரசிகர்கள் போலவே அவரும் வலிமை படத்தின் அப்டேட்டுக்காக காத்துகொண்டு இருப்பதாகவும் கூறியுள்ளார்.
19 ஓவர்களில் 98 ஓட்டங்களே எடுத்த மொயீன் அலியின் அணி: 7.4 ஓவரில் செயின்ட் லூசியா வெற்றி News Lankasri
குழந்தை உரிமை கொண்டாடிய வாடகை தாய்: பெற்றோர் தொடுத்த வழக்கு: தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம் News Lankasri