ஒரே ஃப்ரேமில் தோனியையும் விஜய் சாரையும்.. GOAT படத்தை பற்றிய ரகசியத்தை கூறிய வெங்கட் பிரபு
GOAT
பெரும் எதிர்பார்ப்புடன் சில நாட்களுக்கு முன் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வெளிவந்து படம் GOAT. இது வெங்கட் பிரபு மற்றும் விஜய் கைகோர்த்த முதல் படம் என்பதால் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.
அந்த வகையில், படம் வெளிவந்து 4 நாட்களில் ரூ. 275 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. ஏராளமான ட்விஸ்ட் படத்தில் இருந்த நிலையில், தற்போது ஒரு சுவாரஸ்யமான தகவலை உரையாடல் ஒன்றில் வெங்கட் பிரபு பகிர்ந்துள்ளார்.

விஜய் நடிக்கும் தளபதி 69 படத்தின் புதிய அப்டேட்.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் பெரிய ட்ரீட் என்ன தெரியுமா
ரகசியத்தை கூறிய வெங்கட் பிரபு
அதில், க்ளைமாக்ஸில் தோனியையும் விஜய் சாரையும் ஒரே ஒரு ஃப்ரேமிலாவது ஒன்றாக காட்டிவிட வேண்டும் என நினைத்தேன். தோனிக்கு விஜய் சார் All the best for the finals என்று கூறிவிட்டு செல்வதை போன்றெல்லாம் யோசித்து வைத்திருந்தேன்.
ஆனால், எங்களால் தோனியை அழைத்து வர முடியவில்லை என்று கூறியுள்ளார்.
GOAT படத்தில் பல ட்விஸ்ட் இருந்த நிலையில், இவர்கள் இருவரையும் ஒரே ஃப்ரேமில் பாத்திருந்தால் ரசிகர்களுக்கு அது மிகப்பெரிய ட்ரீட் ஆக அமைந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan
