வெங்கட் பிரபுவின் சென்னை 600028 படத்தின் 3-ஆம் பாகம் உருவாகிறதா? தரமான அப்டேட்
சென்னை 600028
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் வெங்கட் பிரபு. இவர் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த படம் GOAT.
குணச்சித்திர வேடத்தில் நடித்து வந்த வெங்கட் பிரபு அதிரடியாக இயக்குநர் அவதாரம் எடுத்த படம் தான் சென்னை 600028. எஸ்.பி.பி சரண் தயாரிப்பில் கிரிக்கெட், காதல், காமெடி, என ஒரு கமர்ஷியல் படமாக இந்த படம் அமைந்தது.
ஜெய், பிரேம்ஜி அமரன், விஜய் வசந்த் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.
தரமான அப்டேட்
சென்னை 600028 படத்தின் முதல் மற்றும் இரண்டாம் பாகத்தை தொடர்ந்து, தற்போது இப்படத்தின் மூன்றாம் பாகத்தை எடுக்க இயக்குநர் வெங்கட் பிரபு இறங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பாக்கப்படுகிறது.