அஜித் - விஜய் கூட்டணியில் மங்காத்தா 2.. வெங்கட் பிரபு அதிரடியாக பேசிய வீடியோ இதோ
அஜித்துக்கு மிகப்பெரிய படமாக அமைந்த படம் மங்காத்தா. வெங்கட் பிரபு இயக்கிய படத்தில் அவர் நெகடிவ் வேடத்தில் நடித்து இருப்பார். அந்த படத்தின் இரண்டாம் பாகம் வேண்டும் என்பது தான் ரசிகர்களின் நீண்டநாள் கோரிக்கை.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வெங்கட் பிரபு தான் அஜித் மற்றும் விஜய் இருவரையும் வைத்து மங்காத்தா 2 எடுக்க விரும்பியதாகவும், அதை மங்காத்தா ஷூட்டிங் நேரத்திலேயே அவர்களிடம் கதை சொன்னதாகவும் கூறி இருக்கிறார்.
அந்த படம் அப்போதே உருவாகி இருக்க வேண்டும், நடக்காமல் போனது ஏன் என தெரியவில்லை என கூறி இருக்கிறார்.
வெங்கட் பிரபு பேச்சு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. வீடியோ இதோ..
Thala - Thalapathy Vachi Mankatha-2 ????????https://t.co/aaCGpycIFr#AjithKumar ?❤️// #Valimai #AK51BdayFestTomorrow#AK61 // #AK62 // #AK61Update#Vijay66 #Beast pic.twitter.com/fcu4RKrv0o
— Charan Thala ?? (@CharanThala7) April 29, 2022