ஒருவழியாக ரிலீஸுக்கு தயாரான வெங்கட் பிரபுவின் பார்ட்டி திரைப்படம்... முழு விவரம்
பார்ட்டி படம்
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கிய படங்களில் பார்ட்டி படம் மட்டும் ரிலீஸ் ஆகாமல் இருந்தது.
நீண்ட நாட்களாக கிடப்பில் உள்ள இந்த படம் விரைவில் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என தகவல்கள் வெளிவந்துள்ளன.
இந்த படத்தில் சத்யராஜ், ஜெய், ஷாம், சிவா, ஜெயராம், நாசர், ரம்யா கிருஷ்ணன், நிவேதா பெத்துராஜ், ரெஜினா கசன்டிரா, சஞ்சிதா ஷெட்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு வெங்கட் பிரபுவின் தம்பியும், நடிகருமான பிரேம்ஜி அமரன் இசையமைத்துள்ளார்.
சக்திக்கு வந்த அடுத்த பிரச்சனை, ஜனனிக்கு சவால்விடும் அன்புக்கரசி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ
ரிலீஸ் தேதி
பார்ட்டி திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு நகைச்சுவை ஆக்ஷன் படமாக உருவாகியுள்ளது.
நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்டுள்ள இப்படம் வரும் பிப்ரவரி 2026ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என்று தற்போது தகவல்கள் வந்துள்ளது.
படம் கடந்த 2018ம் ஆண்டே அனைத்துப் பணிகளும் முடிந்து வெளியீட்டிற்கு தயாராக இருந்த போது சில நிதிப் பிரச்சனைகளால் படம் கிடப்பில் போடப்பட்டது.