அபிஷேக் ராஜா திரும்பவும் ரிவியூ பண்ண வந்துடாத.. கலாய்த்து தள்ளிய முன்னணி இயக்குனர்
அபிஷேக் ராஜா இணையத்தில் சினிமா விமர்சனங்கள் வீடியோ வெளியிட்டு பிரபலம் ஆனவர். அவர் விஜய் டிவியின் பிக் பாஸ் 5ல் போட்டியாளராக கலந்துகொண்டார், ஆனால் மூன்றாவது வாரமே எலிமினேட் ஆனார். அதன் பிறகு வைல்டு கார்டு என்ட்ரியாக சென்று மீண்டும் எலிமினேட் ஆகிவிட்டார்.
இந்நிலையில் தற்போது இன்ஸ்டாவில் இயக்குனர் வெங்கட் பிரபு உடன் எடுத்த வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டு உள்ளார்.
"நான் youtubeல் இன்னும் படங்கள் ரிவியூ செய்ய ஆரம்பிக்கவில்லை. மாநாடு முதல் நாள் முதல் காட்சி மிஸ் செய்துவிட்டேன் என வருத்தமாக இருக்கிறது. இது தமிழ் சினிமாவில் ஒரு புது முயற்சி" என கூறுகிறார் அபிஷேக்.
அப்போது அங்கு வரும் வெங்கட் பிரபு 'நீ பண்ணாததால் தான் மக்கள் சந்தோசமா இருக்காங்க. தயவு செஞ்சு பண்ணாத ஓகேவா' என கூறி இருக்கிறார்.
மேலும் "ரெண்டு வாட்டி போயும் உன்ன ஏன்டா வெளியே அனுப்பிட்டாங்க" என கேட்கிறார். ஆமாம் மாமியார் வீடு போல ஆகிவிட்டது என அபிஷேக் கூறுகிறார். அப்போ மூணாவது முறை எப்போ போவ என வெங்கட் பிரபு அடுத்த கேள்வியை வைக்கிறார்.
இனி கெஸ்ட்டாக தான் போக வாய்ப்பிருக்கு, போட்டியாளராக போக வாய்ப்பு இல்லை என கூறி சமாளித்து இருக்கிறார் அபிஷேக் ராஜா.
வீடியோ இதோ..
டிரம்ப் கலந்து கொண்ட விருந்தில் துப்பாக்கி சூடு: வெளியான தாக்குதல்தாரியின் பெயர், புகைப்படம் News Lankasri
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri