வெங்கட் பிரபு மற்றும் சிவகார்த்திகேயன் இணையும் திரைப்படத்தில் இப்படியொரு சிக்கலா!
சிவகார்த்திகேயன்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன் இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து மக்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று வசூல் சாதனைகளை படைத்து வருகிறது.
அந்த வகையில் டாக்டர், டான் உள்ளிட்ட திரைப்படங்களை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் ப்ரின்ஸ் திரைப்படம் வெளியாக இருக்கிறது. பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் நாளை பிரம்மாண்டமாக வெளியாகயிருக்கிறது.
இந்நிலையில் ப்ரின்ஸ் திரைப்படம் வெளியாக இருப்பதால் ட்விட்டர் பக்கத்தில் தனது ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலத்துளித்து வந்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.

வெங்கட் பிரபு
அந்த வகையில் இயக்குநர் வெங்கட் பிரபு நடிகர் சிவகார்த்திகேயனிடம் “நாம எப்போ ஷூட்டிங் போலாம்” என கேள்வி கேட்டுள்ளார். அதற்கு சிவகார்த்திகேயன் “ஷூட்டிங் எப்போ வேண்டுமானாலும் போலாம் சார், அதற்கு முன் எப்போ கதை சொல்விங்க” என கேட்டுள்ளார்.
அதற்கு பதிலளித்துள்ள வெங்கட் பிரபு “கதையா” என வடிவேலு GIF உடன் ட்விட் செய்து இருக்கிறார். இதனால் தற்போது ரசிகர்கள் இன்னும் கதை கூட கூறவில்லையா என கமெண்ட் செய்து வருகின்றனர்.
Kadhaiya https://t.co/8petz7Spyf pic.twitter.com/ayfSRozooi
— venkat prabhu (@vp_offl) October 20, 2022
பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறும் ஜி.பி.முத்து