தொடர் விமர்சனங்களால் மனமுடைந்த குக் வித் கோமாளி நடுவர் ! "தரம் தாழ்த்திக் கொள்ளாதீர்கள்"..
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி.
மூன்றாவது சீசனாக ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி எப்போதும் போல ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
கடைசியாக நடந்த எபிசொட்டில் தான் இணையத்தில் பயங்கர விமர்சனங்களுக்கு உள்ளாகி இருக்கிறது. ஆம், நடுவர் வெங்கடேஷ் பட் குக் வித் கோமாளி நிகழ்ச்சி பார்ப்பதன் காரணமாக ஒரு தம்பதிக்கு குழந்தை பிறந்துள்ளது என கூறியிருந்தார்.
மேலும் புகழ் குக் வித் கோமாளி நிகழ்ச்சி ப்ரோமோவை பார்த்ததால் தற்கொலை எண்ணத்தில் இருந்து மீண்டதாகவும் கூறியிருந்தார்.
இதனிடையே எந்த விஷயங்களை கண்ட நெட்டிசன்கள் வெங்கடேஷ் பட் மற்றும் குக் வித் கோமாளியை ட்ரோல் மேட்டரியல் ஆகியுள்ளனர். இது குறித்து தொடர்ந்து மீம்ஸ் மற்றும் விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது வெங்கடேஷ் பட் இது குறித்து பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் "2 நாட்களாக மனமுடைந்து போனான். என்னை ட்ரோல் செய்ததால் கவலைப்படவில்லை. மனிதநேயம் செத்துவிட்டதாக மீம்ஸ்கள் என்னை உணரவைத்தது.
குழந்தை செல்வம் உடையவர்களுக்கே அது எவ்வ்ளவு பெரிய பாக்கியம் என்பது தெரியும். அப்படியென்றால் இல்லாதவர்களை யோசித்து பாருங்கள். மீம்ஸ் கிரியேட்டர்ஸ் எனக்காக அல்ல, உயிரை சுமக்கும் பெண்ணுக்காக கேட்கிறேன்.
தயவு செய்து என்னை கிண்டல் செய்வதாக எண்ணி உங்களை தரம் தாழ்த்திக் கொள்ளாதீர்கள். எனக்கும் மணமுடித்து ஏழு ஆண்டுகள் கழித்து கிடைத்த செல்வம் என் குழந்தை. ஒவ்வொரு நொடியும் ஒரு யுகம் ஆனதை உணர்ந்தவன் நான்" என பதிவிட்டுள்ளார்.
யுவனை இயக்கிய பியார் பிரேமா காதல் இளன்! ப்ரொமோ இதோ