தாமு உடன் பேச்சுவார்த்தை இல்லை.. அவர் CWCயில் இருந்து விலகாதது ஏன்? - வெங்கடேஷ் பட் பேட்டி
விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோவில் கடந்த 4 வருடங்களாக நடுவராக இருந்த வெங்கடேஷ் பட் அதில் இருந்து விலகி தற்போது சன் டிவியின் டாப் குக், டூப் குக் என்ற ஷோவை தொடங்கி இருக்கிறார்.
ஆரம்பத்தில் வெங்கடேஷ் பட் மட்டுமின்றி செஃப் தாமுவும் விஜய் டிவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். ஆனால் திடீரென அந்த வீடியோவை டெலீட் செய்துவிட்டு தனது முடிவை மாற்றிக்கொண்டார்.
பேச்சுவார்த்தை இல்லை
இந்நிலையில் வெங்கடேஷ் பட் அளித்த பேட்டியில் தான் "அந்த சம்பவத்திற்கு பிறகு செஃப் தாமு உடன் பேசவில்லை. அவர் வாக்கு மாறினாலும், நட்பு மாறாது" என கூறி இருக்கிறார்.
குக் வித் கோமாளி தொடங்கியபோது விஜய் டிவி என்னை மட்டும் தான் நடுவராக இருக்க சொன்னார்கள், ஆனால் நான் தான் செஃப் தாமுவும் வேண்டும் என விஜய் டிவியை கட்டாயப்படுத்தி அவரையும் நடுவராக கொண்டு வந்தேன் எனவும் வெங்கடேஷ் பட் கூறியுள்ளார்.
விலகுவதாக அறிவித்தபிறகு விஜய் டிவி அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது. அதற்கு ஒப்புக்கொண்டு தான் தாமு தனது முடிவை மாற்றிக்கொண்டிருக்கிறார், எனக்கு பிடிக்காததால் விலகிவிட்டேன் எனவும் வெங்கடேஷ் பட் கூறி இருக்கிறார்.