குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியது ஏன்... காரணத்தை முதன்முறையாக கூறிய வெங்கடேஷ் பட்
குக் வித் கோமாளி
இயந்திர வாழ்க்கை போல ஓடிக் கொண்டே இருக்கும் மக்கள் இப்போதெல்லாம் சிரிக்கவே மறந்துவிட்டார்கள். அவர்களுக்கு எல்லாம் நல்ல மருந்தாக அமைந்த நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி.
சமையல் நிகழ்ச்சி என்றாலும் கலாட்டாக்கள் தான் அதிகம் இருக்கும். போட்டி ஒருபக்கம் கோமாளிகளில் கலாட்டா மறுபக்கம் என நிகழ்ச்சியே ஜாலியாக இருக்கும். இதுவரை 4 சீசன்கள் ஒளிபரப்பாகி முடிய இப்போது 5வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த 5வது சீசனில் நிறைய விஷயங்கள் புதிது. இயக்குனர், தயாரிப்பு நிறுவனம், ஒரு நடுவர், கோமாளிகள் என பலர் புதியதாக களமிறங்கியுள்ளார்கள். நிகழ்ச்சியும் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக ஒளிபரப்பாகிறது.
வெங்கடேஷ் பட்
இந்த குக் வித் கோமாளி 5வது சீசனில் நடுவர்களில் ஒருவராக இருந்த வெங்கடேஷ் பட் இல்லாதது ரசிகர்கள் பலருக்கும் வருத்தமாக உள்ளது.
இந்த நிலையில் வெங்கடேஷ் பட் குக் வித் கோமாளி 5வது சீசனில் இருந்து வெளியேறியது குறித்து முதன்முறையாக கூறியுள்ளார்.
அதில் அவர், விஜய் டிவியில் நான் 24 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து கொண்டிருக்கிறேன்.
எனக்கு மீடியா என்பது ரொம்பவே புதுசு, கிச்சன் சூப்பர் ஸ்டார், கிச்சன் சூப்பர் ஸ்டார் ஜுனியர், குக் வித் கோமாளி என்று சமையல் நிகழ்ச்சிகளை 15 சீசன்களாக விஜய் டிவியில் நடத்திக் கொண்டிருந்தேன்.
மீடியா மேஷன்ஸ் நிறுவனத்தில் என்னோடு ஆரம்பத்தில் இருந்தவர்கள் இப்போது வரைக்கும் இருக்கிறார்கள். ஆரம்பத்தில் இருந்தே அதிலிருந்த தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர்கள் எல்லோருமே எனக்கு முழு சுதந்திரம் தந்தார்கள்.
நான் விஜய் டிவியில் இத்தனை வருடமாக சுதந்திரமா வேலை செய்வதற்கு காரணமாக இருந்தது மீடியா மெஷன்ஸ் நிறுவனம் தான். அவர்களுக்கும், விஜய் டிவிக்கும் சின்ன கருத்து வேறுபாடு ஏற்பட அவர்கள் வெளியே வந்தார்கள்.
எனக்கும் இவர்கள் தான் கம்போர்ட், அதனால் நானும் இவர்களோடு வெளியே வர வேண்டிய சூழ்நிலை என பேசியுள்ளார்.