குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சியில் தனக்கு பிடித்த போட்டியாளர்கள் யார்- முதன்முறையாக கூறிய வெங்கடேஷ் பட்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் அதிகம். நிகழ்ச்சி ஆரம்பித்தது முதல் இறுதி வரை ரசிகர்கள் பெரிய ஆதரவு கொடுத்தார்கள்.
ரசிகர்கள் எல்லோரின் கேள்வியும் 3வது சீசன் எப்போது தொடங்கும் என்பது தான், ஆனால் இப்போதைக்கு இல்லை என்பது தெரிகிறது.
குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சியின் செட் மொத்தத்தையும் பிரித்து இடம் காலியாக இருந்து புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி இருந்தது.
எனவே 3வது சீசன் இந்த வருட இறுதியில் தொடங்கலாம் என கூறப்படுகிறது.
அண்மையில் இந்நிகழ்ச்சியின் நடுவர்களில் ஒருவரான வெங்கடேஷ் பட் விருது விழாவில் கலந்து கொண்டிருக்கிறார். அப்போது அவரிடம் பேவரெட் குக் வித் கோமாளி யார் என கேட்டுள்ளனர்.
அதற்கு அவர், முதலில் புகழ் தான். அடுத்து பாபா பாஸ்கர், அஷ்வின், கனி போன்றவர்களும் பிடித்தவர்கள் என கூறியுள்ளார்.