வெங்கடேஷ் பட்டை மோசமாக விமர்சனம் செய்த ரசிகர்- அவர் கொடுத்த பதிலடி
குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி மூலம் தமிழ் மக்களுக்கு நன்கு அடையாளம் காணப்பட்டவர் வெங்கடேஷ் பட். பிரபல டாப் ஹோட்டலின் CEOவாக இவர் இருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.
தமிழில் குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சியை முடித்த இவர் இப்போது கன்னடத்தில் ஒளிபரப்பாகும் குக் வித் கிறுக்கு என்ற நிகழ்ச்சியிலும் நடுவராக இருந்து வருகிறார்.
இதைத்தாண்டி வெங்கடேஷ் பட் தனது சொந்த யூடியூப் பக்கத்திலும் நிறைய சமையல் வீடியோக்களை பதிவிடுவது வழக்கம். அப்படி அவரின் ஒரு வீடியோ கீழ் ரசிகர் ஒருவர், ஒரு மிகப்பெரிய செஃப், உணவு சமைக்கும் பொழுது கைககளில் கயிறு எல்லாம் கட்டிக்கொள்ளலாமா.
கேட்டா பெரிய செஃப் என்று கிண்டல் செய்து பதிவிட்டிருந்தார்.
அதற்கு வெங்கடேஷ் பட் கொடுத்த பதிலடி என்னவென்றால், முறைப்படி பார்த்தால் சமைக்கும்போது பேசவே கூடாது. ஆனால், டிவில அதை பின்தொடர முடியாது. அதுபோல என் கையில் கயிறு இருப்பது என் நம்பிக்கை.
கற்றுக்கொடுப்பது நான் கற்ற வித்தை. நீங்கள் பார்க்க வேண்டியது என் திறமையை, கையில் உள்ள கயிற்றை அல்ல என பதிவிட்டுள்ளார்.