இனி நான் அதுமட்டும் செய்யவே மாட்டேன்- குக் வித் கோமாளி புகழ் வெங்கடேஷ் பட் அதிரடி
விஜய் தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி படு ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது. 2 சீசன்களின் வெற்றியை தொடர்ந்து 3வது சீசன் ஒளிபரப்பாகிக் கொண்டு வருகிறது.
இப்போது தான் முதல் நிகழ்ச்சி எனவே மக்கள் இன்னும் அவ்வளவாக பேச ஆரம்பிக்கவில்லை, வரும் வாரங்களில் நிகழ்ச்சி நல்ல ரீச் பெற்றுவிடும் என தெரிகிறது.
இதில் போட்டியாளர்களுடன் நன்றாக ஜாலியாக பேசிக்கொண்டு இருப்பார் வெங்கடேஷ் பட். அவர் நிகழ்ச்சியில் செய்த சில விஷயம் சர்ச்சையாக அதற்கு அவர் இதை நிகழ்ச்சியாக மட்டும் பாருங்க மற்றபடி எதுவும் இல்லை என்றார்.
அடுத்தடுத்து அவரைப் பற்றி நிறைய நெகட்டீவ் கமெண்ட்ஸ் வர அவர் ஒரு முடிவு எடுத்துள்ளார். அதாவது இனி வரும் நெகட்டீவ் கமெண்டுகளுக்கு பதில் அளிக்க மாட்டேன் என முடிவு செய்துள்ளார்.