வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் பட வில்லன்.. யாருனு தெரியுமா
சென்னை 28, படத்தின் மூலம் அறிமுகமாகி, மங்காத்தா படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் இயக்குனர் வெங்கட்பிரபு.
இவர் இயக்கத்தில் தற்போது ‘மாநாடு’ திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் சிம்பு நாயகனாக நடித்துள்ளார். சிம்வுடன் இணைந்து கல்யாணி பிரியதர்ஷனும், எஸ்.ஜே.சூர்யா, எஸ்.ஏ சந்திரசேகர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இயக்குனர் வெங்கட் பிரபு அடுத்ததாக இயக்கும் படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி அப்படத்தில் பிரபல கன்னட நடிகர் சுதீப் நாயகனாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் தயாராக உள்ளதாம்.
நடிகர் சுதீப் ஏற்கனவே தமிழில் ராஜமவுலி இயக்கிய நான் ஈ, விஜய்க்கு வில்லனாக புலி போன்ற படங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.