மாநாடு படத்துடன் வலிமை படத்தின் அப்டேட்டையும் வெளியிட்ட இயக்குனர் வெங்கட் பிரபு.. சந்தோஷத்தில் தல ரசிகர்கள்
வெங்கட் பிரபு இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் மாநாடு. இப்படத்தில் சிம்பு கதாநாயகனாக நடித்து வருகிறார்.
மேலும், கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, எஸ்.ஏ. சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, கருணாகரன், பிரேம்ஜி உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள்.
யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். ஏற்கனவே இப்படத்தின் டீசர் மற்றும் முதல் பாடல் வெளியாகியிருந்தது.
இந்நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபு தனது மாநாடு படத்துடன் இணைந்து தல அஜித்தின் வலிமை படத்தின் அப்டேட்டையும் வெளியிட்டுள்ளாராம்.
இதில், வலிமை மற்றும் மாநாடு படத்தின் இரண்டாவது பாடலை யுவன் சங்கர் ராஜா ரெடி செய்து விட்டதாகவும், விரைவில் இந்த பாடல்கள் வெளியாக இருக்கிறது என்றும் இயக்குனர் வெங்கட் பிரபு கூறியிருப்பதாக தெரிவிக்கின்றனர்.
இதனால், தல அஜித்தின் ரசிகர்கள் சந்தோஷத்தில், இதனை வைரலாக்கி வருகின்றனர்.
வெளிநாட்டில் எபோலா தொற்றால் பாதிக்கப்பட்ட பிரித்தானியர் நாட்டிற்கு திருப்பி அனுப்பப்படவுள்ளார் News Lankasri
எண் கணிதம் கூறும் ரகசியம்: 35 வயதிற்குப் பிறகு இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு ராஜவாழ்க்கை! Manithan