சிம்புபின் 'வெந்து தணிந்தது காடு' படப்பிடிப்பு துவங்கியது.. ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து கசிந்த புகைப்படம்
சிம்பு நடிப்பில் தற்போது, மஹா மற்றும் மாநாடு என இரு திரைப்படங்கள் உருவாகி, விரைவில் வெளியாக தயாராகவுள்ளது.
மேலும், 'பத்து தல' எனும் படத்தின் படப்பிடிப்பும் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வரிசையில் தற்போது, கவுதம் மேனன் மற்றும் சிம்பு இணையாவிற்கும் புதிய படத்தின் அறிவிப்பு இன்று அதிகாரப்பூர்வமாக வெளியானது.
ஏற்கனவே 'நதிகளிலே நீராடும் சூரியன்' என தலைப்பிடப்பட்டிருந்த இப்படத்திற்கு தற்போது, 'வெந்து தணிந்தது காடு' என புதிய டைட்டில் வைத்து, First வெளியிட்டனர்.
இந்த First லுக்கில் நடிகர் சிம்புவை பார்ப்பதற்கு, ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு சிறு வாலிபன் போல் தோற்றமளிக்கிறார்.
இந்நிலையில், தற்போது 'வெந்து தணிந்தது காடு' படத்தின் படப்பிடிப்பு தலத்தில் இருந்து கவுதம் மேனனின் சில புகைப்படங்கள் இணையத்தில் கசிந்துள்ளது.
இதனை ரசிகர்கள் பலரும், தங்களது சமூக வலைத்தளத்தில் அதிகமாக பகிர்ந்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்..
#VTK kick starts! ? #VendhuThanindhathuKaadu #STR47 #SilambarasanTR @SilambarasanTR_ @menongautham @arrahman @IshariKGanesh @Ashkum19 @VelsFilmIntl pic.twitter.com/bpgdOfylA5
— STR Fans Trends (@STRFansTrends) August 6, 2021