பழம்பெரும் நடிகர் தர்மேந்திரா இறந்துவிட்டாரா? மகள் ஈஷா தியோல் வெளியிட்ட பதிவு
தர்மேந்திரா
இந்திய சினிமாவின் பழம்பெரும் நடிகர்களில் ஒருவர் தர்மேந்திரா காலமானார் என்கிற செய்தி வெளியாகியுள்ளது. இவருடைய வயது 89.

கடந்த சில நாட்களாகவே உடல்நிலை இருந்து வந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஷாருக்கான், சல்மான் கான் என பல முன்னணி நட்சத்திரங்கள் தர்மேந்திராவை சந்திக்க மருத்துவமனைக்கு சென்றனர்.
மகள் வெளியிட்ட பதிவு
இன்று காலை இவர் காலமானார் என்கிற செய்திகள் பரவ துவங்கிய நிலையில், தர்மேந்திராவின் மகளும் பிரபல நடிகையுமான ஈஷா தியோல் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த பதிவில், தனது தந்தையின் உடல்நிலை சீராக உள்ளது என்றும் வதந்திகளை பரப்ப வேண்டாம். அவர் நன்றாக வீடு திரும்ப அனைவரும் வேண்டிக்கொள்ளுங்கள் என பதிவு செய்துள்ளார்.