இரண்டு வாரங்கள் கடந்தும் 'ஜோதி' படத்திற்கு கிடைத்த ரெஸ்பான்ஸ்
8 தோட்டாக்கள், ஜீவி, வனம் உள்ளிட்ட படங்களில் நடித்து இருப்பவர் நடிகர் வெற்றி. அவரது அடுத்த படமான ஜோதி கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு திரைக்கு வந்தது.
போட்டிக்கு மேலும் சில படங்கள் வந்தாலும் இந்த படம் தான் தற்போது சிங்கிள் தியேட்டர்களில் அதிகம் ஓடிக்கொண்டிருக்கிறதாம். இரண்டு வாரங்கள் கடந்த நிலையிலும் தற்போது ஜோதி படம் தமிழ்நாட்டில் 10+ தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது.

பொள்ளாச்சி ATSC, நெய்வேலி நிதி ரத்னா, கடலூர் வேல்முருகன், போளூர் அருண், சேத்பட் பத்மாவதி, உளுந்தூர்பேட்டை நாராயணா, சேந்தியாத்தோப்பு வாசுகி, கோயம்பேடு ரோகினி ஆகிய தியேட்டர்களில் ஜோதி படம் தற்போது திரையிடப்பட்டு வருகிறது.
சர்ச்சையில் சிக்கிய ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர்.. பாடகி ராஜலக்ஷ்மியின் அதிரடி முடிவு