சிறகடிக்க ஆசை சீரியல் புகழ் வெற்றிவசந்த் பெயரில் நடந்த மோசடி., பதற்றத்தில் நடிகர் வெளியிட்ட வீடியோ
சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை குடும்பங்கள் கொண்டாடும் கதைக்களத்துடன் மிகவும் விறுவிறுப்பாக செல்லும் தொடர்.
இப்போது கதையில் என்ன நடக்கிறது என்பது எல்லோருக்கும் நன்றாக தெரியும். மனோஜ் வாயால் மீனாவின் நகையை என்ன செய்தார் என்பதை சொல்ல வைக்க வேண்டும் என எலுமிச்சை பிளான் போட்டுள்ளார்.
அது அவர் நினைத்தபடி க்ளிக் ஆக மனோஜ்-விஜயா சிக்கியுள்ளனர். விஜயா செய்த காரியத்தால் இனி உன்னிடம் பேச மாட்டேன், உன் கையால் தண்ணீர் கூட குடிக்க மாட்டேன் என்கிறார் அண்ணாமலை.
பல வருடங்களுக்கு பிறகு சந்தித்துள்ள ரம்பா மற்றும் விஜய்.. நடிகை குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட அழகிய போட்டோஸ்
ஷாக்கிங் வீடியோ
இந்த நிலையில் சிறகடிக்க ஆசை சீரியல் மூலம் பிரபலம் அடைந்த வெற்றி வசந்த் பெயரில் சமூக வலைதளங்களில் மோசடி நடந்துள்ளதாம்.
அவர் வெளியிட்ட வீடியோவில், நான் பேஸ்புக்கில் ஆரம்பத்தில் இருந்தேன், அப்போது ஒரு சில புகைப்படங்களை பதிவிட்டேன், ஆனால் அதன்பிறகு என்னுடைய அக்கவுண்டில் இருந்து என்னுடைய புகைப்படங்களை எடுத்துவிட்டு நான் அந்த அக்கவுண்டை லாக் செய்துவிட்டேன்.
ஆனால் என்னை போலவே யாரோ ஒரு அக்கவுண்ட் ஓபன் செய்து பயன்படுத்தி வருகிறார்கள். அவர்கள் ரசிகர்களிடம் பேசி வருகிறார்கள் என்று எனக்கு தெரிய வந்தது. நானும் அது குறித்து கம்ப்ளைன்ட் கொடுத்து இருக்கிறேன்.
நான் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மட்டுமே இருக்கிறேன், யாரும் போலி அக்கவுண்டை நம்ப வேண்டாம் என வீடியோ வெளியிட்டுள்ளார். இதோ அவர் வெளியிட்ட வீடியோ,