சிறகடிக்க ஆசை வெற்றி வசந்த் மனைவிக்கு என்ன ஆச்சு.. கதறி அழும் பொன்னி சீரியல் வைஷ்ணவி.. வைரல் வீடியோ
வெற்றி - வைஷ்ணவி
சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர் வெற்றி வசந்துக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது. பொன்னி சீரியல் கதாநாயகி வைஷ்ணவி மற்றும் வெற்றி இருவரும் காதலித்து வந்த நிலையில், திருமணம் செய்துகொண்டனர்.
திருமணமாகி சில மாதங்கள் ஆகும் நிலையில், நடிகை வைஷ்ணவி கதறி அழுது வீடியோ வெளியிட்டுள்ளார். இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவில் பேசிய வைஷ்ணவி, ஒருவரை தரவாக காட்ட முயற்சிப்பதை முதலில் நிறுத்துங்கள் என கூறியுள்ளார்.
கதறி அழும் வைஷ்ணவி
மேலும் பேசிய அவர், ”நான் ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கேன். அம்மா, அப்பாவை விட்டு இங்க வந்த ரெண்டு சீரியல் பண்ணி, கிட்டதட்ட 6 வருடம் உக்கார்ந்து சாப்பிடவே ரொம்ப கஷ்டமா இருந்தது. இப்போ நான் கல்யாண வாழ்க்கையில் எனக்கு ஒரு அமைதி வேண்டும் என்பதற்காக பிரேக் எடுத்திருக்கேன் அவ்வளவுதான். நீ வந்த உன் புருஷன் காசுல உக்கார்ந்து சாப்புடுற தண்டசோறு தான நீ என கேட்கிறார்கள். ஆம், என் புருஷன் சம்பாதிக்கிறான் நான் சாப்புடுறேன். அதைவிட்டுட்டு நான் என்ன வேறொருவர் காசுலயா சாப்புடுறேன். அதற்கு எனக்கு எல்லா உரிமையும் இருக்கு. அதை தவறாக பேச உனக்கு என்ன உரிமை இருக்கிறது" என கோபத்துடன் கண்ணீர் விட்டு பேசியுள்ளார்.
இதன்மூலம் தன்னை பற்றி நெகட்டிவ்வாக பேசுபவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார் பொன்னி சீரியல் நாயகி வைஷ்ணவி. இதோ அந்த வீடியோ..

30 லட்சம் இழப்பீடு பெற்ற செவிலியர்! பிரித்தானியாவில் கண்ணசைவுகளால் துன்புறுத்திய சக பெண் ஊழியர்! News Lankasri

ரஷ்யாவின் மலிவு விலை கச்சா எண்ணெய் வாங்கி... உக்ரைனுக்கு டீசலாக ஏற்றுமதி செய்யும் இந்தியா News Lankasri
