நடிகர்களை அப்படி சொல்வது வருத்தமாக இருக்கு: இயக்குனர் வெற்றிமாறன் ஆதங்கம்
இயக்குனர் வெற்றிமாறன் தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெற்றி படங்கள் கொடுத்து வரும் இயக்குனர். அவர் தற்போது விடுதலை என்ற படத்தை இயக்கி வருகிறார். அதில் விஜய் சேதுபதி, சூரி உள்ளிட்ட பலர் நடித்து இருக்கின்றனர். அந்த படத்தை முடித்தபிறகு வாடிவாசல் படத்தை வெற்றிமாறன் இயக்க இருக்கிறார்.
வெற்றிமாறன் படங்கள் மட்டுமின்றி அவர் மேடைகளில் பேசும்போது கூறும் விஷயங்கள் அவ்வப்போது பரபரப்பை ஏற்படுத்தும்.
ஜாதி
இன்று ஒரு நிகழ்ச்சி மேடையில் பேசிய அவர் ஜாதி சான்றிதழ் பற்றி பேசினார். நான் என் குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் போது எந்த ஜாதியும் இல்லை என குறிப்பிட நினைத்தேன். ஆனால் அப்படி ஒரு சான்றிதழ் தர மறுத்துவிட்டார்கள்.
நீதிமன்றம் சென்றும் அப்படி ஒரு சான்றிதழ் கிடைக்கவில்லை. கண்டிப்பாக ஜாதியை குறிப்பிட்டே ஆகவேண்டும் என சொல்லிவிட்டார்கள். ஜாதி வேண்டாம் என சொல்பவர்களுக்கு ஒரு option இருக்கவேண்டும் என நான் நினைக்கிறேன் என வெற்றிமாறன் கூறி இருக்கிறார்.
நடிகர்களை தலைவர்னு கூப்பிடுறாங்க..
மேலும் தற்போது நடிகர்களை பலரும் தலைவர் என கூப்பிடுவது வருத்தமளிக்கிறது என வெற்றிமாறன் கோபமாக கூறி இருக்கிறார்.
"நடிகர்கள் ஸ்டார் என்பது ஓகே. ஆனால் தலைவர் என சொல்வது கஷ்டமாக இருக்கு. அதை செய்யாமல் இருக்கலாம்" என அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.