வடசென்னை 2 எப்போ.. விருது விழா மேடையில் இயக்குநர் வெற்றிமாறன் கொடுத்த அப்டேட்
வடசென்னை 2
இயக்குநர் வெற்றிமாறன் எந்த ஒரு விழாவில் கலந்துகொண்டாலும் அவரிடம் கேட்கும் ஒரே கேள்வி வடசென்னை 2 எப்போ என்று தான்.
தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகி 2018ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் வடசென்னை. இப்படத்தில் தனுஷுடன் இணைந்து அமீர், கிஷோர், டேனியல் பாலாஜி, சமுத்திரக்கனி, ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். படம் மாபெரும் அளவில் வெற்றியடைந்துள்ளது.
முதல் பாகத்தின் இறுதியில் 'வடசென்னை 2 அன்புவின் எழுச்சி' என படத்தை முடித்திருப்பார். இதனால் வடசென்னை 2 படத்தை ஆவலுடன் எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
வெற்றிமாறன் கொடுத்த அப்டேட்
இந்த நிலையில், சமீபத்தில் பிரபல விருது விழா ஒன்றில் வெற்றிமாறன் கலந்துகொண்டார். அப்போது மேடையில் வடசென்னை 2 குறித்து ரசிகர்களிடையே இருந்து கரகோஷம் வந்தது.
அதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய அவர் "வருது சீக்கிரமா வருது. ஆனால், வடசென்னை 2 ஆரம்பிச்சா கூட இவ்வளவு பெரிய உற்சாகம் இருக்காது, அதற்கு பின் குறைந்துவிடும் என நினைக்கிறன்" என வெற்றிமாறன் கூறியுள்ளார்.

தோண்ட தோண்ட தங்கம்; பல ஆண்டுகளுக்குப் பிரச்சினை இல்லை - மிக பெரிய சுரங்கம் கண்டுபிடிப்பு IBC Tamilnadu

எடப்பாடி வீட்டுக்கும் செல்வேன்; திமுக கூட்டணியில் கூடுதல் கட்சிகள் இணைய வாய்ப்பு - ஸ்டாலின் IBC Tamilnadu

மணமகனுக்கு ஹெலிகாப்டர், விருந்தினர்களுக்கு ரூ.2.5 கோடி மதிப்புள்ள பரிசுகள்.., திருமண செலவு எவ்வளவு தெரியுமா? News Lankasri
