விடுதலை ரிலீஸ், வாடிவாசல் எப்போது? லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்த இயக்குனர் வெற்றிமாறன்
வெற்றிமாறன்
தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனர்களில் ஒருவர் வெற்றிமாறன். இவர் இயக்கத்தில் கடந்த ஆண்டு விடுதலை முதல் பாகம் வெளிவந்தது.
இளையராஜா இசையமைத்திருந்த இப்படத்தில் சூரி கதையின் நாயகனாக நடித்திருந்தார். விஜய் சேதுபதியின் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்தார்.
இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து விடுதலை இரண்டாம் பாகம் குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. விடுதலை இரண்டாம் பாகத்தில் கூடுதல் கதாபாத்திரங்கள் இணைந்துள்ளனர். மஞ்சு வாரியர், கென் கருணாஸ் மற்றும் அட்டகத்தி தினேஷ் ஆகியோர் இணைந்துள்ளார்களாம்.
லேட்டஸ்ட் அப்டேட்
இந்த நிலையில், சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தது வெற்றிமாறனிடம் விடுதலை 2 எப்போது, வாடிவாசல் நடக்குமா என இரண்டு கேள்விகள் அவருடைய படங்கள் சம்மந்தபட்டு கேட்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த வெற்றிமாறன் "விடுதலை 2 இன்னும் 15 நாட்களில் இருந்து 20 நாட்கள் படப்பிடிப்பு இருக்கிறது. அது முடிந்தவுடன் ஓரிரு மாதங்களில் வெளியாகும். விடுதலை 2 முடித்தவுடன் வாடிவாசல் தான்" என கூறியுள்ளார்.

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
