விஜய் சேதுபதி வாத்தியார் இல்லை.. விடுதலை 2 ரகசியத்தை போட்டுடைத்த வெற்றிமாறன்
விடுதலை 2
வெற்றிமாறன் படம் என்றாலே எப்போதுமே மக்களிடம் தனி வரவேற்பு கிடைக்கும். அப்படி அவரது இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் விடுதலை.
இதில் சூரி, விஜய் சேதுபதி, கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். கடந்த மார்ச் மாதம் 31ம் தேதி ரிலீஸ் ஆன இப்படத்திற்காக கிட்டத்தட்ட 2 முதல் 3 ஆண்டுகள் உழைத்துள்ளார்.
இதனால் மற்ற படங்களில் நடிக்காமல் முழுக்க முழுக்க விடுதலை படத்தில் நடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தியுள்ளார். இப்படம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
இதனால், இந்த படத்தின் இரண்டாம் பாகம் பெரும் எதிர்பார்ப்புடன் உருவாகி உள்ளது. ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்துக்கொண்டிருந்த இப்படம் வரும் டிசம்பர் 20 - ம் தேதி வெளியாக உள்ளது.
ரகசியம்
இந்நிலையில், நேற்று சென்னையில் இப்படத்தின் இசை, டிரெய்லர் வெளியீடு விழா நடை பெற்றது. அப்போது மேடையில் பேசிய இயக்குனர் வெற்றிமாறன் சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
அதில், "ஒரு நல்ல படம் எடுப்பதற்கு பெரும் உழைப்பு தேவை. அந்த வகையில், என் படக்குழுவினர் விடுதலை படத்திற்காக சிறப்பான உழைப்பை கொடுத்துள்ளனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு சுமார் 257 நாட்கள் நடைபெற்றது. அதில், விஜய் சேதுபதி கிட்டத்தட்ட 120 நாட்கள் நடித்திருப்பார். ஒரு படம் நன்றாக வருவதற்கு படக்குழுவினர் தான் முக்கிய காரணமாக உள்ளனர்.
இப்படம் முடியும் போது பல விஷயங்களை கற்றுக்கொண்டு செல்வீர்கள். 'வாத்தியார்' என்பது விஜய் சேதுபதியோ, நானோ இல்லை. விடுதலை என்பது தான் வாத்தியார். அது தான் மையக்கரு" என கூறியுள்ளார்.

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
