விஜய்யுடன் இணையும் படம் குறித்து அதிரடி விஷயம் சொன்ன வெற்றிமாறன்- எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்
இளைய தளபதி விஜய் பிஸியாக படங்கள் நடித்து வரும் ஒரு நடிகர். மாஸ்டர் படத்தை ரிலீஸ் செய்த உடனே தனது அடுத்த படத்தையும் உறுதி செய்துவிட்டார் விஜய்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார். படத்திற்கான படப்பிடிப்பு பாதி முடிந்துவிட்டது, அடுத்த அப்டேட்டிற்காக ரசிகர்கள் ஆவலாக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த நேரத்தில் வெற்றிமாறன், விஜய் படம் குறித்து கொடுத்த பேட்டி ஒன்று வெளியாகியுள்ளது. அதில் வெற்றிமாறன் கூறியதாவது, விஜய்யுடன் இணையும் படம் தாமதமாகிக் கொண்டு வருகிறது.
காரணம் ஏற்கெனவே நான் நிறைய கமிட் செய்துள்ள படங்களால் தான் தாமதமாகிறது. விஜய்யுடன் பணிபுரிய கிடைத்த வாய்ப்புக்கு எனக்கு சந்தோஷம் தான், விரைவில் அந்த படங்களின் வேலைகளை முடித்துவிட்டு விஜய் படம் இயக்குவேன் என கூறியுள்ளார்.