வாடிவாசல் படம் எப்போது துவங்குகிறது தெரியுமா? இயக்குனர் வெற்றிமாறனின் அதிரடி
வாடிவாசல்
முடிவு சூர்யா - வெற்றிமாறன் கூட்டணியில் பிரமாண்டமாக உருவாகவுள்ள திரைப்படம் வாடிவாசல். இப்படம் கடந்த 2021ஆம் ஆண்டு துவங்கிய நிலையில், இதுவரை படப்பிடிப்பு துவங்கவில்லை.
ஒரு சிறிய ப்ரோமோ ஷூட்டிங் மட்டும் நடைபெற்றது. கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் இப்படத்திற்கான முன் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறதாம். வெளிநாட்டில் இப்படத்திற்கான VFX வேலைகளும் நடைபெற்று வருவதாக தகவல் தெரிவிக்கின்றனர்.
இந்த ஆண்டு இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விடுதலை 2 படத்தின் படப்பிடிப்பே இன்னும் முடியவில்லை. இதனால் கண்டிப்பாக இந்த ஆண்டு வாடிவாசல் துவங்குவது என்பது சாத்தியம் இல்லை என்கின்றனர்.
படப்பிடிப்பு
விடுதலை 2 திரைப்படம் டிசம்பர் மாதம் வெளிவரவுள்ள நிலையில், வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பை ஜனவரி 2025ஆம் ஆண்டில் இருந்து துவங்கிவிடாலாம் என வெற்றிமாறன் உறுதியாக முடிவு செய்துவிட்டாராம்.
வாடிவாசல் படப்பிடிப்பு ஜனவரி 2025ல் துவங்கும் நிலையில், கண்டிப்பாக 2026ல் படம் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கப்போகிறது என்று.

Brain Teaser Maths: இடது மூளை ஆற்றல் கொண்டவரால் மட்டுமே புதிரை தீர்க்க முடியும் உங்களால் முடியுமா? Manithan
