விடுதலை 2 படத்தில் வெற்றிமாறன் செய்த மிகப்பெரிய தவறு.. இவரே இப்படி செய்யலாமா
விடுதலை
வெற்றிமாறன் இயக்கத்தில் ஒரு படம் வெளியாகிறது என்றால், கண்டிப்பாக அது தரமான படைப்பாக தான் இருக்கும் என ரசிகர்களின் எதிர்பார்ப்பு இருக்கும்.
அசுரன் படத்திற்கு பின் 5 ஆண்டுகளாக விடுதலை கதையில் பயணித்து வந்தார் வெற்றிமாறன். விடுதலை முதல் பாகம் கடந்த ஆண்டு வெளிவந்த நிலையில், நேற்று விடுதலை இரண்டாம் பாகம் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
வெற்றிமாறன் செய்த தவறு
இந்த நிலையில், இப்படத்தில் இயக்குனர் வெற்றிமாறன் செய்த தவறு, இணையத்தில் படுவைரலாக பரவி வருகிறது. விடுதலை 1 மற்றும் 2 படங்களின் ஒளிப்பதிவாளராக இருப்பவர் வேல்ராஜ்.
இவர் விடுதலை முதல் பாகத்தில் கவுதம் மேனன் உடன் இணைந்து போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆனால், நேற்று வெளிவந்த இரண்டாம் பாகத்தில் வேல்ராஜ், பண்ணையார் கதாபாத்திரத்தில் நடித்திருக்கவும், பலரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
அது எப்படி, முதல் பாகத்தில் காவல் துறை அதிகாரியாக நடித்திருந்தவர், இரண்டாம் பாகத்தில் பண்ணையாராக நடிக்க முடியும் என கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகிறார்கள். இயக்குனர் வெற்றிமாறன் இப்படியொரு மிகப்பெரிய தவறை செய்யலாமா என்றும் கேள்வி கேட்டு வருகின்றனர்.