உதவி இயக்குனர்களுக்கு விலை உயர்ந்த பரிசளித்த வெற்றிமாறன்.. என்ன பரிசு தெரியுமா?
தமிழ் சினிமாவில் தொடர் வெற்றி படங்களை கொடுத்து வருபவர் தான் இயக்குனர் வெற்றிமாறன். இவர் இயக்கத்தில் நடிகர் சூரி நடிப்பில் உருவாகியுள்ள "விடுதலை" படம் வருகின்ற மார்ச் 31 -ம் தேதி வெளியாகவுள்ளது.
பரிசு
சமீபத்தில் இப்படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலானது. அதில் நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் படத்திற்காக மிக கடினமாக உழைப்பதை நாம் பார்த்தோம்.
இந்நிலையில் விடுதலை படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய 25 பேருக்கும், இயக்குனர் வெற்றிமாறன் செங்கல்பட்டில் உள்ள உத்திரமேரூர் பகுதியில் ஆளுக்கு தலா ஒரு கிரவுண்ட் நிலத்தை பரிசாக கொடுத்துள்ளாராம். மேலும் அந்த இடத்தில் விவசாயம் அல்லது வீடு கட்டுங்கள் என்று வெற்றிமாறன் அறிவுறுத்தியுள்ளார்
56 வயதாகும் நடிகை நதியாவா இது?- புகைப்படம் பார்த்து இந்த வயதிலும் இப்படியா, ஆச்சரியத்தில் ரசிகர்கள்

இதுதான் Eleven-க்கு ஸ்பெல்லிங்கா? அரசு ஆசிரியர்கள் - தலைமை ஆசிரியர் எழுதியதை பாருங்க.. IBC Tamilnadu
