Bad Girl தான் கடைசி படம்.. கடைய சாத்தறோம்.. அதிரடியான முடிவு எடுத்த வெற்றிமாறன்
வெற்றிமாறனின் Grass Root நிறுவனம்
பொல்லாதவன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான வெற்றிமாறன், உதயம் NH4 படத்தின் மூலம் தயாரிப்பாளராக கால்பதித்தார். இவருடைய தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் 'Grass Root Film Company'.
பொறியாளன், காக்கா முட்டை, விசாரணை, பாரம் போன்ற பல படங்களை வெற்றிமாறன் தயாரித்தார். இவருடைய தயாரிப்பில் தற்போது Bad girl திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படம் பல தடைகளை மீறி தற்போது செப்டம்பர் 5ம் தேதி வெளிவரவிருக்கும் நிலையில், அதற்கான ப்ரோமோஷனில் வெற்றிமாறன் ஈடுபட்டு வந்தார்.
அதிரடியான முடிவு
இந்த நிலையில், இன்றைய பிரஸ் மீட்டில் கலந்துகொண்டு பேசிய வெற்றிமாறன், இயக்குநராக இருப்பது மிகவும் சுதந்திரமானது என்றும், ஆனால் தயாரிப்பாளராக இருப்பது மிகவும் அழுத்தம் நிறைந்தது என்றும் பேசினார்.
பின் "Bad Girl திரைப்படம்தான் Grass Root Film கம்பெனியின் கடைசி படம். அதற்கு பிறகு கம்பெனி கடையை சாத்தறோம்" என தனது தயாரிப்பு நிறுவனத்தை இத்தோடு முடிவு விட்டதாக அறிவித்தார்.