விடுதலை 2 பட ரசிகர்களுக்காக வெற்றிமாறனின் புது பிளான்.. அதுவும் OTT ரிலீஸில், என்ன அது?
விடுதலை 2
தமிழ் சினிமாவில் 2024ம் ஆண்டின் அடுத்த பாதியில் வெளியாகும் படங்கள் நல்ல ஹிட்டடித்து வருகின்றன.
அப்படி கடந்த டிசம்பர் 20ம் தேதி வெளியான படம் தான் விடுதலை 2. கடந்த ஆண்டு இந்த படத்தின் முதல்பாகம் வெளியாக அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது.
இரண்டாம் பாகம் வெளியாகி இதுவரை சுமார் ரூ. 25 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்துள்ளதாக கூறப்படுகிறது. வெற்றிமாறன் மற்றும் படக்குழுவினரின் 4 வருட கஷ்டங்களை ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள்.
இந்த படத்தில் இடம்பெறும் 20 நிமிட கிளைமேக்ஸ் காட்சிக்கு மட்டும் வெற்றிமாறன் 100 நாட்களை செலவழித்துள்ளார்.
ஓடிடி ரிலீஸ்
படம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிநடைபோட்டு வரும் நிலையில் ஓடிடி ரிலீஸ் குறித்து ஒரு தகவல் வந்துள்ளது.
அதாவது 2ம் பாகத்தில் இணைக்கப்பட்ட காட்சிகளை கூட 10 நிமிடம் கட் செய்த வெற்றிமாறன் இப்போது 2ம் பாக படத்தின் ஓடிடி ரிலீஸிற்காக சுமார் 1 மணிநேர காட்சியை இணைந்து வெளியிட முடிவு செய்துள்ளாராம்.
அதன்படி இப்படம் அடுத்த மாதம் 2 அல்லது 3வது வாரத்தில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.