ஆடுகளம் படத்துக்கு வெற்றிமாறன் முதலில் வைத்த பெயர் இதுதான்
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் 2011ல் வெளியான படம் ஆடுகளம். நல்ல வரவேற்பை பெற்ற அந்த படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ் இசையமைத்து இருக்கிறார்.
இந்த படத்திற்கு முதலில் ஆடுகளம் என வெற்றிமாறன் பெயர் வைக்கவில்லையாம்.

முதலில் வைத்த டைட்டில்
சேவல் சண்டையை மையப்படுத்திய கதை என்பதால் முதலில் சண்டகோழி என்று தான் பெயர் வைக்க நினைத்தாராம். ஆனால் அதை பயன்படுத்திவிட்டார்கள் என்பதால் அடுத்து 'சேவல்' என டைட்டில் வைக்க முடிவெடுத்து பதிவு செய்ய சென்றபோது, அதே டைட்டிலை இயக்குனர் ஹரி பதிவு செய்துவிட்டார்.
அந்த டைட்டிலை ஹரியிடம் கேட்டிருக்கிறார் வெற்றிமாறன். ஆனால் நான் பூஜை போட்டுவிட்டேன் என சொல்லி டைட்டிலை தர மறுத்துவிட்டாராம் ஹரி.
அதற்கு பிறகு தான் யோசித்து ஆடுகளம் என்கிற டைட்டில் முடிவு செய்தாராம் வெற்றிமாறன்.

சூப்பர் சிங்கர் 9 பைனல்: டைட்டில் வின்னர் இவர்தான்! பரிசு இத்தனை லட்சமா