வெறித்தனமான போஸ்டர்.. வெற்றிமாறன் - சிம்பு படத்தின் தலைப்பு என்ன தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு
வெற்றிமாறன் - சிம்பு
விடுதலை 2 படத்திற்கு பின் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் சிம்பு நடித்து வருகிறார். மேலும் இப்படத்தில் சமந்தா கதாநாயகியாக நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், அது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.
கடந்த சில வாரங்களுக்கு முன், இப்படம் குறித்து சிறிய வீடியோ ஒன்றை தயாரிப்பாளர் தாணு வெளியிட்டு இருந்தார். மேலும், இயக்குநர் வெற்றிமாறன் செல்லும் இடங்களில் எல்லாம் சிம்பு படத்தின் அப்டேட் கேட்டு ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர்.
வடசென்னை படத்தின் உலகில் இப்படத்தின் கதை அமைந்திருப்பதால், இப்படத்தை ஆவலுடன் எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
அரசன்
இந்நிலையில், அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை கலைப்புலி தாணு வெளியிட்டுள்ளார். வெற்றிமாறன் - சிலம்பரசன் இணைந்துள்ள இப்படத்திற்கு 'அரசன்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
இதோ அந்த டைட்டில் போஸ்டர்:
ஆளப்பிறந்த அரசன்
— Kalaippuli S Thanu (@theVcreations) October 7, 2025
வெற்றியுடன் சிலம்பரசன்#VetriMaaran @SilambarasanTR_#STR49 #SilambarasanTR #VCreations47 #ARASAN pic.twitter.com/zLk8chzGJl