வாடிவாசல் படத்தின் மீதுள்ள மிகப்பெரிய எதிர்பார்ப்பு.. இயக்குநர் வெற்றிமாறன் கூறிய பதில்
வாடிவாசல்
தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் திரைப்படங்களில் ஒன்று வாடிவாசல். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் இப்படத்தின் அறிவிப்பு வெளிவந்த நிலையில், படப்பிடிப்பு துவங்காமல் இருந்தது.
சூர்யா - வெற்றிமாறன் கூட்டணியில் இப்படம் உருவாகவிருப்பதால், எப்போது இப்படத்தை திரையில் பார்ப்போம் என ரசிகர்கள் காத்துகொண்டு இருக்கிறார்கள். இந்த ஆண்டு இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளது.

தாமிரபரணி படத்தில் விஷால் ஜோடியாக நடித்த நடிகையை நினைவு இருக்கா.. இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க
இப்படத்தில் இயக்குநரும், நடிகருமான அமீர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.
வெற்றிமாறன் பேட்டி
இந்த நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில், வாடிவாசல் படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு குறித்து இயக்குநர் வெற்றிமாறன் வெளிப்படையாக பேசியுள்ளார்.
இதில் "வாடிவாசல் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்தால் நான் மகிழ்ச்சியடைவேன். ஆனால் அதற்கு நான் பொறுப்பேற்க முடியாது. என் படங்களை உருவாக்கும் போது எனது 100% சதவீத பங்களிப்பை தருவேன். வாடிவாசல் படத்திற்கும் எனது 100% அர்ப்பணிப்பையும் கொடுப்பேன்" என கூறியுள்ளார்.