தமிழ் திரையுலகின் மாபெரும் இயக்குனருடன் கைகோர்க்கும் ஜூனியர் என்.டி.ஆர்
ஜூனியர் என்.டி.ஆர்
ஆர்.ஆர்.ஆர் படத்தை தொடர்ந்து அடுத்தாக கொரட்டலா சிவா இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் ஜூனியர் என்.டி.ஆர். இதனை தொடர்ந்து பிரஷாந்த் நீல் இயக்கத்தில் உருவாகவுள்ள திரைப்படத்திலும் நடிக்கிறார்.
இந்த இரண்டு படங்களுக்கு பின் ஜூனியர் என்.டி.ஆர் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகவுள்ள திரைப்படத்தில் நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் இயக்குனர் வெற்றிமாறன், ஜூனியர் என்டிஆரை நேரில் சந்தித்து கதை கூறியதாகவும் அந்த கதை அவருக்கு பிடித்திருந்ததாகவும் தெலுங்கு திரைவட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.
இயக்குனர் வெற்றிமாறன் தற்போது சூரி கதாநாயகனாக நடிக்கும் 'விடுதலை' படத்தை இயக்கி வருகிறார். இப்படத்திற்கு பிறகு சூர்யா நடிப்பில் 'வாடிவாசல்' படத்தை இயக்க இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தனி விமானம் பிடித்து ஓடியது யார் என மக்களுக்கு தெரியும் - முதல்வர் விஜய்க்கு செந்தில் பாலாஜி பதிலடி IBC Tamilnadu
"கரூர் நிகழ்ச்சி குறித்து அமீர் கேள்வி: '41 பேரை இழந்த குடும்பத்தினர் கைதட்டி மகிழ்ந்தார்களா?' – பதிவு வைரல்" IBC Tamilnadu