முதன்முறையாக தான் கடைப்பிடிக்கும் Diet குறித்து பேசிய இயக்குனர் வெற்றிமாறன்
தமிழ் சினிமாவில் தரமான கதையை மக்களிடம் கொண்டு போய் சேர்க்கும் இயக்குனர்களில் ஒருவர் வெற்றிமாறன். இவரும்-தனுஷும் இணைந்து எந்த படம் எடுத்தாலும் அது மக்களிடம் பெரிய வரவேற்பை பெற்று விடுகிறது.
அண்மையில் வெற்றிமாறன் தான் கடைபிடிக்கும் டயட் பற்றி எல்லாம் பேட்டி கொடுத்துள்ளார். அதில் அவர், எனக்கு 13 வயதில் இருந்து சிகரெட் பிடிக்கும் பழக்கம் இருந்தது.
2008ல் இருந்து 2009 அது ஒரு வருடத்தில் எனக்கு அதிகம் சிகரெட் பிடிக்கும் பழக்கம் இருந்தது.
பின் கௌதம் வாசுதேவ் மேனனின் வாரணம் ஆயிரம் படத்தை பார்த்து அந்த பழக்கத்தை விட்டுவிட்டேன். மைக்ரோவேவ் ஓவனில் சமைத்த உணவை சாப்பிடுவது விஷம் கலப்பதற்று சமம், அதையும் விட்டுவிட்டேன். கீட்டோ டயட் என்பதை ஃபாலோ செய்கிறேன்.
கொழுப்பு அதிகமாகவும் கார்போஹைட்ரேட் கம்மியாகும் இருக்கும் உணவுப் பொருட்களை எடுத்துக் கொள்கிறேன்.
தீங்கு விளைவிக்கும் பழங்களையும் வெள்ளை சர்க்கரையும் சாப்பிடவே மாட்டேன் என்று கூறியிருக்கிறார்.