கையில் பிளேடு, கண்ணில் கோபம்.. வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருந்து கைவிடப்பட்ட படத்தின் first லுக் போஸ்டர்
வெற்றிமாறன் - தனுஷ்
தமிழ் சினிமாவில் வெற்றி கூட்டங்களில் ஒன்று வெற்றிமாறன் - தனுஷ் கூட்டணி. பொல்லாதவன் படத்தின் மூலம் முதல் முறையாக இந்த கூட்டணி அமைந்தது.
பின் ஆடுகளம், வடசென்னை, அசுரன் என தொடர்ந்து வெற்றிப்படங்களை மட்டுமே இந்த கூட்டணி கொடுத்துள்ளது.
இதுவரை நான்கு முறை மட்டுமே தான் இந்த கூட்டணி கைகோர்த்துள்ளது என நாம் நினைத்துக்கொண்டு இருக்கிறோம். ஆனால், இவர்கள் இருவரும் இணைவதாக இருந்தது கைவிடப்பட்ட திரைப்படமும் லிஸ்டில் இருக்கிறது.
தேசிய நெடுஞ்சாலை
ஆம், வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பதாக இருந்து படப்பிடிப்பை வரை சென்று கைவிடப்பட்ட திரைப்படம் தான் தேசிய நெடுஞ்சாலை. இப்படத்தின் First லுக் போஸ்டர் கூட வெளிவந்தது.
இந்த போஸ்டரில் நடிகர் தனுஷின் கையில் பிளேடு மற்றும் கண்ணில் கோபத்துடன் இருக்கும்படி லுக் இருந்தது.
வெற்றிமாறன் தனுஷ் கூட்டணியில் உருவாகுவதாக இருந்து கைவிடப்பட்ட இப்படம் தான் அதன்பின் உதயம் என்.ஹெச்.4 எனும் தலைப்பில் சித்தார்த் நடிக்க மணிமாறன் இயக்க வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
கமலின் இரண்டாம் திருமணத்தை நடத்தி வைத்த சிவாஜி.. இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம்

அஜித் குமார் மரண வழக்கில் கைதான 5 காவலர்களையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு News Lankasri

பங்கர் பஸ்டராக உருவெடுக்கும் இந்தியாவின் அக்னி ஏவுகணை - சீனா, பாகிஸ்தானுக்கு கடும் அச்சுறுத்தல் News Lankasri
