பிக் பாஸ் நடிகருக்கு டப்பிங் பேசிய இயக்குனர் வெற்றிமாறன்.. அதுவும் எந்த படத்தில் தெரியுமா
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இடத்தை பிடித்திருக்கூடிய இயக்குனர்களில் ஒருவர் வெற்றிமாறன்.
பொல்லாதவன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான வெற்றிமாறன் தொடர்ந்து அசுரன் வரை வெற்றிப்படங்களை மட்டுமே கொடுத்துள்ளார்.
இவருடைய இயக்கத்தில் தற்போது விடுதலை எனும் திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடிக்கின்றனர்.
இப்படத்தை முடித்துவிட்டு சூர்யா நடிப்பில் உருவாகவிருக்கும், வாடிவாசல் படத்தை இயக்கவுள்ளார்.
அதனை தொடர்ந்து விஜய்யுடனும் கைகோர்ப்பேன் என்று அவரே கூறியுள்ளார்.
இந்நிலையில் பொல்லாதவன் படத்தில் நடிகர் சென்ராயனுக்கு டப்பிங் பேசியது இயக்குனர் வெற்றிமாறன் தானாம். அந்த காட்சியின் வீடியோ கூட தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.
திரையுலகில் பிரபலமாக இருக்கும் நடிகர் சென்ராயன், பிக் பாஸ் சீசன் 2வில் போட்டியாளராக கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
— Shittier Tamil Movie Details (@TamilDetails) December 1, 2021