தளபதி விஜய்க்கு முன் RRR பட நடிகரை இயக்கும் வெற்றிமாறன் ! யார் தெரியுமா?

By Jeeva Jun 19, 2022 06:40 AM GMT
Report

தெலுங்கு நடிகருடன் கைக்கோர்க்கும் வெற்றிமாறன் 

தமிழ் சினிமாவில் தற்போது உள்ள மிக சிறந்த இயக்குநர்களில் ஒருவர் இயக்குநர் வெற்றிமாறன்.

இவர் இயக்கத்தில் இதுவரை வெளியான திரைப்படங்கள் அனைத்தும் சிறந்த விமர்சனங்களை பெற்று வெற்றியடைந்துள்ளது. அதன்படி கடைசியாக அவரின் இயக்கத்தில் வெளியான அசுரன் திரைப்படமும் தேசிய விருதுகளை பெற்றது.

இதனிடையே தற்போது சூரி மற்றும் விஜய் சேதுபதியை வைத்து வெற்றிமாறன் விடுதலை படத்தை இயக்கி வருகிறார். அப்படத்தை முடித்தபின் வெற்றிமாறன் சூர்யாவின் வாடிவாசல் திரைப்படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தற்போது வெற்றிமாறன் அடுத்து பிரம்மாண்ட வெற்றி பட நடிகருடன் கூட்டணியமைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆம், அதன்படி தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான ஜூனியர் NTR-யை இயக்கவுள்ளராம் வெற்றிமாறன்.

ஜூனியர் NTR அவரின் NTR31 திரைப்படத்தை முடித்த பின் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிப்பார் என்றும் இப்படத்தை முடித்தபின்பே வெற்றிமாறன் - விஜய் கூட்டணியில் உருவாகும் திரைப்படத்தை எதிர்பார்க்கலாம் என கூறப்படுகிறது.  

தளபதி விஜய்க்கு முன் RRR பட நடிகரை இயக்கும் வெற்றிமாறன் ! யார் தெரியுமா? | Vetrimaran Next With Rrr Hero

லோகேஷ் படத்தில் விஜய்யின் கதாபாத்திரம் இப்படித்தான் இருக்குமாம், செம்ம மாஸ்

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US