சூர்யா - வெற்றிமாறனின் வாடிவாசல் படத்திற்கு வந்த சோதனை.. சூர்யா எடுத்த அதிரடி முடிவு
சூர்யா - வெற்றிமாறனின் வாடிவாசல்
முதல் முறையாக வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள திரைப்படம் வாடிவாசல். கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் இப்படத்தின் பூஜை சமீபத்தில் போடப்பட்ட சில டெஸ்ட் ஷூட் மட்டும் நடைபெற்றது.
மேலும், வாடிவாசல் படத்தில் நடிப்பதற்காக நடிகர் சூர்யா பிரதேய்கமாக சில பயிற்சிகளையும் மேற்கொண்டு வந்தார்.

தள்ளிபோகும் படப்பிடிப்பு
இந்நிலையில், வாடிவாசல் படத்துக்கு புது சிக்கல் ஏற்பட்டு உள்ளது. ஆம், விடுதலை படத்தின் படப்பிடிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் பிசியானதன் காரணமாக வாடிவாசல் படத்தின் முதற்கட்ட பணிகள் முடங்கி உள்ளதாம்.
இதனால் அப்படத்தின் ஷுட்டிங்கும் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வாடிவாசல் படம் தள்ளிப்போவதால் அதற்கு முன் இயக்குனர் TJ ஞானவேல் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க சூர்யா திட்டமிட்டுள்ளார் என்று தெரிவிக்கின்றனர்.