அசுரன் தேசிய விருது வென்றது குறித்து இயக்குனர் வெற்றிமாறன் என்ன கூறியுள்ளார் தெரியுமா?

Dhanush Vetrimaran Asuran movie National Award
By Kumar Mar 23, 2021 01:02 PM GMT
Report

நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான அசுரன் திரைப்படம், தமிழ் சினிமாவின் மிக சிறந்த திரைப்படங்களில் ஒன்றாக உள்ளது.

இப்படம் சிறந்த விமரசங்களை பெற்றது மட்டுமின்றி ரசிகர்களின் பேராதரவை பெற்று வசூல் ரீதியாகவும் பெரிய சாதனை படைத்தது. இந்நிலையில் இப்படம் நிச்சயம் தேசிய விருதை வெல்லும் என அனைவரும் எதிர்பார்த்து வந்த நிலையில் தற்போது இரண்டு தேசிய விருதுகளை திட்டிசென்றுள்ளது அசுரன்.

ஆம், சிறந்த தமிழ் திரைப்படம், சிறந்த நடிகர் உள்ளிட்ட பிரிவுகளில் அசுரன் திரைப்படம் விருதுகளை வென்றுள்ளது.  

மேலும் அசுரன் திரைப்படத்திற்கு கிடைத்த அங்கீகாரம் குறித்து வெற்றிமாறன் பேசியுள்ளார்.

அதில் "அசுரன் திரைப்படத்திற்கு தேசிய விருது கிடைத்தது பெரிய ஊக்கமாக உள்ளது. நான் எந்த விருது வாங்கினாலும் இயக்குனர் பாலு மகேந்திராவுக்கே முதல் நன்றி, சிவசாமி கதாபாத்திரத்திற்காக நடிகர் தனுஷுக்கு தேசிய விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது" என கூறியுள்ளார் வெற்றிமாறன்.  

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US