வேட்டையாடு விளையாடு படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது கமல் ஹாசன் கிடையாதாம்.. இந்த முன்னணி நடிகர் தானாம்
கௌதம் மேனன் இயக்கத்தில் கமல் ஹாசன் நடித்து கடந்த 2006ஆம் ஆண்டு வெளிவந்த படம் வேட்டையாடு விளையாடு.
கமல் ஹாசனுடன் இணைந்து இப்படத்தில் பிரகாஷ் ராஜ், ஜோதிகா, டேனியல் பாலாஜி, கமலினி முகர்ஜி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தார்கள்.
சிறந்த கதைக்களத்தில் அமைக்கப்பட்டிருந்த இப்படம், வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றிபெற்றது.
இந்நிலையில் இப்படத்தில் முதன் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது உலகநாயகன் கமல் ஹாசன் கிடையாதாம்.
ஆம், வேட்டையாடு விளையாடு படத்தில் முதன் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது மலையாள நடிகர் மோகன்லால் தானாம்.
அப்போது சில காரணங்களால் இப்படத்தில் அவரால் நடிக்கமுடியாமல் போனதனால், அதன்பின் கமல் ஹாசனிடம் கதை சொல்லி ஓகே செய்துள்ளாராம் கௌதம் மேனன்.
ட்ரம்ப் நிகழ்ச்சி துப்பாக்கிதாரியின் கொலைப்பட்டியல்... விடுபட்டிருந்த ஒரு முதன்மை அதிகாரியின் பெயர் News Lankasri