வேட்டையன் படம் 15 நாட்களில் செய்த வசூல்.. எவ்வளவு தெரியுமா
வேட்டையன்
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் படம் என்றாலே அப்படத்தின் மீது மக்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும், அதே போல் வசூலிலும் சாதனைகளை படைக்கும்.
கடைசியாக ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்து வெளிவந்த ஜெயிலர் படம் உலகளவில் ரூ. 635 கோடி வசூல் செய்ததாக சொல்லப்படுகிறது. இதன்பின் இவர் நடித்து கடந்த 10ஆம் தேதி வெளியான திரைப்படம் வேட்டையன்.
முதல் முறையாக இயக்குனர் TJ ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. சமூகத்திற்கான தேவையான கருத்துக்களை இப்படத்தின் மூலம் இயக்குனர் ஞானவேல் பேசியிருந்தார்.
வசூல்
உண்மை சம்பவங்களை மையமாக கொண்டு உருவான வேட்டையன் படம் உலகளவில் 15 நாட்களில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, இப்படம் 15 நாட்களில் உலகளவில் ரூ. 245 கோடி வசூல் செய்துள்ளது. மேலும் தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எனது கல்விக் கட்டணம் இனப்படுகொலைக்கு செலவழிக்கப்படுகிறது: பட்டமளிப்பு விழாவில் குமுறிய மாணவி News Lankasri
